200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் ; இந்திய ஸ்பின்னர்கள் அபாரம்

Published On:

| By Kumaresan M

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் இன்று (பிப் .23 ) நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. மதியம் 2 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தொடர்ச்சியாக 12 வது போட்டியில் டாஸ் தோற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். babar azam out

முதல் ஓவரில் 11 பந்துகள்

இந்திய வீரர் முகமது ஷமி பந்து வீச்சை தொடங்கினார். முதல் ஓவரில் மட்டும் முகமது ஷமி 5 பந்துகளை வைடாக வீசினார். 6 ரன்கள் விட்டு கொடுக்கப்பட்டது. முன்னதாக , ஜாகீர் கான், இர்பான் பதான் ஆகியோர் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர். தொடர்ந்து,. பாகிஸ்தான் ஓபனர்கள் பொறுமையாக ஆடினர். அவ்வப்போது, பந்தை பவுண்டரிக்கும் விரட்டினர். babar aza

எனினும், ‘9வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் பாபர் அசாம் வீழ்ந்தார். 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் அவுட்சைட் எட்ஜ் பந்தை அடிக்க முயல, பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ராகுலிடம் தஞ்சமடைந்தது. பாகிஸ்தான் அணி 47 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த நிலையில் , அடுத்ததாக முகமது ரிஸ்வான் களம் இறங்கினார்.

பாபர் அசாம் அவுட்

ஆனால், இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. இதே ஓவரில் ஒரு குயிக் சிங்கிள் ரன்னுக்கு ஆசைப்பட்டு இமாம் ரன் அவுட் ஆனார். அக்ஷார் பட்டேல் நேரடியாக பந்தால் ஸ்டம்பை அடித்து இமாமை வெளியேற்றினார். 10 ஓவர்களில் பாகிஸ்தான் 52 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடர்ந்து , ரிஸ்வானுடன் சவுத் ஷகீல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டது. இதனால், ரன்ரேட் வெகுவாக குறைந்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 26வது ஓவரில்தான் 100 ரன்களை கடந்தது. இதற்கு பிறகு, ரிஸ்வானும் சவுத் ஷகீலும் இந்திய ஸ்பின்னர்களை சமாளித்து ஓரளவுக்கு அடித்து விளையாடினார்கள். இதனால், சவுத் ஷகில் 63 பந்துகளில் அரை சதம் அடித்தார். னால்ரன்,.a bar azut

பாகிஸ்தான் அணி 31 ஓவர்களில் 137 ரன்களை எடுத்திருந்தது. பின்னர், சவ்த் ஷகீல் 63 ரன்களிலும் ரிஷ்வான் 46 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய ஸ்பின்னர்கள் அபார பந்து வீச்சில் பாகிஸ்தான் பேட்டிங் சீர்குலைந்தது என்றே சொல்லாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share