ADVERTISEMENT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 22 காளைகளை அடக்கி கார் வென்ற இளைஞர்!

Published On:

| By Kavi

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி பாலமுருகன் என்ற இளைஞர் முதல் பரிசான காரை வென்றார்.

புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) பொங்கல் திருநாளையொட்டி கோலாகலமாக நடைபெற்றது.

ADVERTISEMENT

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. இந்தக் காளைகளை அடக்க சுமார் 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 

11ஆவது சுற்று முடிவில் 22 காளைகளை அடக்கி, வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கும் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம்பிடித்த அவனியாபுரம் கார்த்திகிற்கு பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

சிறந்த காளையாக விருமாண்டி சகோதரர்களின் காளையான முத்து கருப்பன் தேர்வு செய்யப்பட்டது. அந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 57 பேர் காயமடைந்தனர். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share