ராமேஸ்வரம், கரூர், குருவாயூர், ஈரோடு செல்லும் ரயில் பயணிகளுக்கான முக்கியமான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரயில் சேவைகளில் என்ன மாற்றங்கள்?
- திருச்சி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் செப்.29,30 ஆகிய நாட்களில் மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும். ராமேஸ்வரத்துக்கு பதிலாக மானாமதுரையில் இருந்து இந்த ரயில் புறப்படும்.
- மதுரை- சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ், வரும் செப். 27, செப்.30 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து மாலை 3.30 மணிக்கு பதிலாக 4.15 மணிக்கு புறப்படும்
- திருச்சி- ஈரோடு பயணிகள் ரயில் செப். 25 (இன்று), செப் 28, செப். 30 ஆகிய நாட்களில் திருச்சி- கரூர் இடையே மட்டும் இயக்கப்படும்.
- செப்டம்பர் 29-ந் தேதி குருவாயூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை- திண்டுக்கல் வழியாக இயக்கப்படாது; விருதுநகர்- மானாமதுரை- திருச்சி வழியாக சென்னைக்கு இயக்கப்படும்.
- செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், செப். 25 முதல் செப். 30 வரை திண்டுக்கல்- மதுரை வழியாக இயக்கப்படாது; விருதுநகர்- மானாமதுரை- திருச்சி வழியாக இயக்கப்படும்.