ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் மதுரைக்கு இன்று (செப்டம்பர் 30) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 10.15 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06075) புறப்படுகிறது. இது நாளை பிற்பகல் 2.15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில், பெரம்பூர்- ஜோலார்பேட்டை- ஈரோடு- பாலக்காடு- திருச்சூர் வழியாக திருவனந்தரபும் செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் (06161) புறப்படும். இது நாளை காலை 10.15-க்கு மதுரையை சென்றடையும். இந்த சிறப்பு ரயில், விழுப்புரம்- திருச்சி- திண்டுக்கல் வழியாக மதுரை சென்றடையும்.
இதேபோல இன்று இரவு மதுரைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.