தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று பிப்ரவரி 25-ந் தேதி சென்னை வருகை தருகிறார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு இன்று முதல் பிப்ரவரி 27-ந் தேதி வரை 3 நாட்கள்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் குழுவினர், தமிழக தேர்தல் அதிகாரிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யப்படும்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தலைமைத் தேர்தல் ஆணையர் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், தேர்தலை நடத்துவது தொடர்பான அவர்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை கட்சிகள் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், அத்தியாவசியத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு முகமைகளின் பிரதிநிதிகளுடனும் விரிவான ஆலோசனைகள் நடைபெறும். 74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையரின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
