என்னுடைய மூச்சு இருக்கும் வரை நானே பாமகவின் தலைவர்; அன்புமணி செயல் தலைவர்தான் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Ramadoss PMK
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஜூன் 26-ந் தேதி செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது: பாமகவில் என்னால் நியமிக்கப்பட்டவர்கள் அனைவருக்குமான பொறுப்பு நிரந்தரமானது. அன்புமணி மன்னிப்பு கேட்பது பிரச்சனை இல்லை. நான் தொடங்கிய கட்சியான பாமகவில் நான் சொல்கிறபடிதான் அன்புமணி செயல்பட வேண்டும்.
அன்புமணியுடனான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பேசுகிறோம்.. பேசிக் கொண்டே இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு; ஆனால் இந்த பிரச்சனைக்கு இன்னமும் முடிவு வரவில்லை.
என் மூச்சு இருக்கும் வரை பாமகவின் தலைவர் நான்தான்.. அன்புமணி செயல் தலைவர் மட்டுமே. இதில் எந்த மாற்றமும் இல்லை. திமுகவில் எனது நண்பர் கலைஞர் தலைவராக இருந்த போது ஸ்டாலின் எதுவும் முணுமுணுக்கவில்லை
தைலாபுரம் தோட்ட வாசலில் பாமக பேனர்களை சில விஷமிகள்தான் கிழித்துள்ளனர். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை. முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தியது வருந்தக் கூடியது. மறைந்த தலைவர்களின் கருத்துகளில் முரண்பாடுகள் இருந்தாலும் கொச்சைப்படுத்தக் கூடாது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.