‘சும்மா அதிருதுல’… அஜித் டைட்டிலை கைப்பற்றிய அருண் விஜய்…!

Published On:

| By Minnambalam Login1

arun vijay vs ajith kumar

அருண் விஜய்யின் 36-வது படத்தை மான் கராத்தே, கெத்து படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ரெட்ட தல என்று பெயர் சூட்டியுள்ளனர். படத்தின் தலைப்பிற்கு பின் ஒரு பிளாஷ்பேக் உள்ளது.

ADVERTISEMENT

இந்தப் பெயர் தீனா படத்திற்கு பின், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருந்த படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த பெயர்.

ஆனால் அதற்கான வாய்ப்பு முருகதாஸிற்கு அமையவில்லை. அதனால், தன்னுடைய சிஷ்யர் இயக்கும் படத்துக்கு தலைப்பை கேட்டவுடன் கொடுத்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ADVERTISEMENT

அஜீத் குமாருக்கு அமையாத அந்தப் பெயர் அருண் விஜய்க்கு அமைந்திருக்கிறது. இதனால் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதும் அவரது ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

-ராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜா பாடல்கள் வழக்கில் நீதிமன்றம் கேள்வி!

சேரன் வீட்டில் விசேஷம்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

‘காதலே காதலே’ மஞ்சுமேல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்த அபர்ணா தாஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share