மஞ்சுமேல் பாய்ஸ் புகழ் தீபக் பரம்போல்-அபர்ணா தாஸ் திருமணம் வெகு விமரிசையாக இன்று (ஏப்ரல் 24) நடைபெற்றுள்ளது.
பீஸ்ட், டாடா படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அபர்ணா தாஸ். மனோகரம் என்ற மலையாள படத்தில் நடித்தபோது மஞ்சும்மேல் பாய்ஸ் புகழ் தீபக் பரம்போலுக்கும், இவருக்கும் காதல் மலர்ந்தது.
தொடர்ந்து தங்களது கேரியரில் கவனம் செலுத்திய இருவரும் திருமண வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர். இன்று காலை தீபக் பரம்போல் – அபர்ணா தாஸ் திருமணம் கோலாகலமாக குருவாயூரில் நடந்தேறியது.
இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றனர். இதைப்பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து தீபக்-அபர்ணா திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: வேகமா ஏறுவது யார்? வெயிலுக்கும் தங்கத்துக்கும் போட்டி!
CSKvsLSG : சொந்த மைதானத்தில் முதல் தோல்வி… ருதுராஜ் விளக்கம்!