செயற்கையான தட்டுப்பாடு… பெட்ரோல் பங்க்குகள் மூடல்!

Published On:

| By Kavi

பெட்ரோல் டீசல் ஸ்டாக் இல்லாததால் சென்னையில் சில இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. 

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, இதனால் ஹோட்டல்கள் உணவு வகைகளை குறைத்துள்ளன. 

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னையில் 215 சிறு மற்றும் நடுத்தர ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது பெட்ரோல் பங்க்குகளிலும் எரிபொருட்கள் தீர்ந்து வருகின்றன.

ADVERTISEMENT

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பங்குகளிலும் நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்று எரிபொருளை நிரப்பிச் சென்றன.

அதோடு சென்னை மவுண்ட் ரோட்டில் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் சி என் ஜி கேஸ் ஆகியவை ஸ்டாக் இல்லை என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு பங்குகள் மூடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பங்கில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பெட்ரோல் கிடைக்கும் என்று பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இருப்பு இருக்கும் பங்குகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோலை நிரப்பும் நிலை இருப்பதால், வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோக்களை புக் செய்வதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் குறித்த நேரத்தில் அலுவலகம் மற்றும் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

முன்னதாக, சமூக வலைதளங்களில் பரவிய செய்தி காரணமாக பலரும் வந்து பெட்ரோல் டீசல் நிரப்பி சென்றதால் தான் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக விற்பனையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சூழலில் 21 நாட்களுக்கு பெட்ரோல் டீசல் கையிருப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் அதிகளவில் கேன்களில் பெட்ரோல் வாங்குவது ஆபத்து, செயற்கையான பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் ஏற்படும் என்றும் பெட்ரோல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share