தமிழகத்தில் 66 லட்சம் பேர் முகவரியே இல்லாதவர்கள் என வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கி இருப்பது வியப்பளிக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று (டிசம்பர் 21) செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், தமிழகத்தில் 66 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களை நீக்கியதை நாங்கள் விமர்சிக்கவில்லை. இதை ஏன் இத்தனை ஆண்டுகாலம் செய்யாமல் இருந்தார்கள்?
இறந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. இவர்களைத் தவிர 66 லட்சம் பேரை முகவரி இல்லாதவர்கள் என நீக்கி உள்ளனர். சென்னை மாநகரில் 3-ல் ஒரு பகுதி வாக்காளர்கள், முகவரியே இல்லாதவர்களா? அதுதான் வியப்பளிக்கிறது.
அதிமுக இதை ஆதரிக்கிறது என்றால் அவர்களது முதலாளி பாஜக சொல்வதைத்தான் செய்ய முடியும். அதனால்தான் SIR-ஐ அதிமுக ஆதரிக்கிறது என்றார்.
