இனி சிலிண்டர் வாங்க வேண்டாம் : குழாய் எரியாயு திட்டத்துக்கு ஒப்புதல்!

Published On:

| By Kavi

சமையல் எரிவாயுக்கு கேஸ் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இனி குழாய் மூலம் எரிவாயு வழங்குவதற்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Approval to provide gas cylinders

வெளிநாடுகளில் குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசுடன் டோரன்ட் கேஸ் (torrent gas) நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்தவகையில் சென்னையில் அண்ணா நகரில் உள்ள மெட்ரோ சோன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குழாய் மூலமாக வீட்டு உபயோக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் பயன்பாட்டில் உள்ளது.

இந்தசூழலில், சென்னையில் 8 பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 27 இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனம் அனுமதி கேட்டிருந்தது. முதல்கட்டமாக 8 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட வடக்கு அவென்யூ 26 வது தெரு, கண்ணாத்தாள் சாலை, ஆபிஸ் காலனி டி.வி.எஸ் அவென்யூ,

அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பிளாக் 40 வது தெரு, ஸ்பர் டேங்க் சாலை,

தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலை,

கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட ஜெய் நகர், நடேசன் நகர் மேற்கு உள்ளிட்ட இடங்களில் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குழாய் மூலம் சமையல் எரிவாயு பெற  7,090 ரூபாய் பெறப்படும். இதில் 6,500 ரூபாய் மானியமாக திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதை தவிர மீட்டர் ஒன்று பொறுத்தப்படும். அதன்மூலம் எரியாவு பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.Approval to provide gas cylinders

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share