திமுகவில் அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு!

Published On:

| By Kavi

திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு, மாநில அளவில் முக்கிய பொறுப்பு கொடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து சீனியரான அன்வர் ராஜா, கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் திமுக இலக்கிய அணி தலைவர் பொறுப்பு அன்வர் ராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 9) திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த திமுக இலக்கிய அணித்தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமிக்கப்படுகிறார். திமுக சட்ட திட்ட விதி 31, பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share