வில்லிவாக்கம் தொகுதியில் அண்ணா நகர் கார்த்திக் மோகன் போட்டியிடுகிறார்.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வெற்றியழகன் 76,127 வாக்குகள் பெற்று வெற்றி வெற்றார்.
இந்த முறை அங்கு போட்டியிட விருப்பம் இல்லை என வெற்றியழகன் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் தவெக தேர்தல் பிரச்சாரா மேலாண்மை குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவார் என்று தகவல்கள் வருகின்றன.
எனவே அவரை எதிர்த்து அண்ணா நகர் கார்த்திக் மோகன் போட்டியிடுவார் என்று நேற்று மின்னம்பலத்தில் தவெக ஆதவ் அர்ஜூனாவை எதிர்த்து திமுக வேட்பாளராக அண்ணா நகர் கார்த்திக் மோகன்? என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தியில் கூறியிருந்தோம்.
அதன்படி அண்ணா நகர் கார்த்திக் மோகன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் திமுக ஐடி விங் மாநில துணை செயலாளராக இருக்கிறார்.
