’பேட் கேர்ள்’ டீசர் வழியாகத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் அஞ்சலி சிவராமன். பெண்மையின் மலர்ச்சியை அறியத் துடிக்கிற ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் துடுக்குத்தனத்தோடு அதில் தோன்றியிருந்தார்.
பள்ளி, கல்லூரி, பணி என்று வெவ்வேறு காலகட்டத்தில் அந்த பெண்ணின் பாலின ஈர்ப்பு என்னவாக இருந்தது என்பதாக அமைந்த அந்த டீசர் பெருமளவில் எதிர்ப்பைச் சம்பாதித்தது. அதேநேரத்தில், ‘பேட் கேர்ள் வந்தவுடன் வரவேற்பைக் கொட்ட வேண்டும்’ என்றவாறே சில ரசிகர்கள் காத்துக் கிடப்பதும் இணைய வெளியில் தெரிகிறது. Gamerlog web series 2025
அவர்களது எதிர்பார்ப்பை ஏதோ ஒரு வகையில் ஈடு செய்கிற வகையில், அஞ்சலியின் நடிப்பில் புதிதாக வெளியாகியிருக்கும் ஒரு வெப்சீரிஸ் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘கேமர் லோக்’ எனும் இப்படைப்பினை அமேசான் மற்றும் எம்எக்ஸ் ப்ளேயரில் கண்டு மகிழலாம் இலவசமாக. Gamerlog web series 2025

நான்கு இளைஞர்களுடன் ஒரு இளம்பெண் இணைந்து ‘வீடியோகேம்’ போட்டி ஒன்றில் பங்கேற்கிறார் எனும் கதையைக் கொண்டிருக்கிறது இந்த வெப்சீரிஸ். இதில் இன்றைய ஜென்ஸீ தலைமுறைக்குப் பிடித்த நாயகியாகத் தோன்றியிருக்கிறார் அஞ்சலி.
’தாரே ஜமீன் பர்’ படத்தில் அமீர்கான் உடன் போட்டியிட்டு நடித்த சிறுவன் தர்ஷீல் சபாரி நினைவிருக்கிறதா? அவர்தான் இதில் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தேஜஸ்வி சர்மா, சின்மய் சந்திரன்சூ, சேத்தன் தவான் உள்ளிட்ட பலர் இதில் இடம்பெற்றிருக்கின்றனர்.
ஆர்யா தியோ இயக்கியுள்ள இந்த சீரிஸில் அஞ்சலியின் நடிப்பு பாராட்டுகளை அள்ளி வருகிறது. இவர் அறிமுகமான கோபால்ட் ப்ளூ எனும் இந்திப் படம் நெட்ப்ளிக்ஸில் வெளியானது. இது போக, ஏற்கனவே பிஎம் செல்ஃபிவாலி மற்றும் க்ளாஸ் என்று இரண்டு வெப்சீரிஸ்களில் நடித்திருக்கிறார். இவை அனைத்திலுமே தென்னிந்தியப் பெண்ணாக அவர் நடிக்கவில்லை. அதனாலேயே, அவரது ‘பேட் கேர்ள்’ மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அப்படியே இருக்கிறது.
’இதையெல்லாம் சொல்றதுக்குப் பதிலா பேட் கேர்ள் என்னாச்சுன்னு சொல்லலாம்’ என்று ’அப்டேட்’ கேட்பது புரிகிறது. பதில் சொல்றவங்க வேற வேலைகள்ல பிஸியா இருக்காங்களே..?!
Gamerlog web series 2025

