காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்… அமித்ஷா கொடுத்த உறுதி!

Published On:

| By Selvam

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்ரல் 23) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். Amit Shah meets victims family

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நேற்று (ஏப்ரல் 23) நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சவுதி அரேபியாவிற்கு அரசு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து கேள்விப்பட்டதும் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார். நேற்று காஷ்மீர் விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில், இன்று தாக்குதல் நடைபெற்ற பகல்ஹாம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற அமித்ஷா, அப்பகுதியை பார்வையிட்டார். மேலும், இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, மாநில முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அமித்ஷா, இந்த கொடூரமான தாக்குதலை நடத்தியவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார். Amit Shah meets victims family

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share