விஜய்யுடன் பேச்சுவார்த்தையா? எடப்பாடி சொல்லும் விளக்கம்

Published On:

| By Mathi

eps Press Meet tvk

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார கூட்டத்துக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

ADVERTISEMENT

செய்தியாளர்: அதிமுக- பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு சம்பந்தமாக…

எடப்பாடி பழனிசாமி: அதெல்லாம் இன்னும் இல்லை சார். நாங்க பேசும்போது உங்ககிட்ட தெளிவா குறிப்பிடுறோம். போதுமா? எல்லாத்தையும் அழைச்சு சொல்லிருவோம். தொகுதி பங்கீடு தேர்தல் அறிவிச்ச உடனே நடக்கும், உங்களையெல்லாம் அழைச்சு எந்தெந்த தொகுதி என்னன்னு தெளிவா சொல்லிருவோம்.

ADVERTISEMENT

செய்தியாளர்: தமிழக வெற்றிக் கழகம் பத்தி..

எடப்பாடி பழனிசாமி: அது ஏன் அடுத்த கட்சி பத்தி நான் பேசணும்? எங்க கட்சிய பத்திதானே நாங்க பேச முடியும்?

ADVERTISEMENT

செய்தியாளர்: பிரதமர் மோடியின் திருச்சி பயணம் தேர்தல்ல எந்த அளவுக்கு எதிரொலிக்கும்னு நினைக்கிறீங்க?

எடப்பாடி பழனிசாமி: நீங்கதான் சொல்லணும். நீங்கதான் மக்களைப் பாக்குறீங்க. மத்திய அரசாங்கம் எதுவுமே செய்யலைன்னு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் பேசுறாரு. பிரதமர் மோடி, ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களைக் கொடுக்குறாரு, வளர்ச்சித் திட்டங்களைக் கொடுக்குறாரு, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிருக்காரு, பல திட்டங்களைத் திறந்து வைச்சிருக்காரு, புதிய ரயில்கள் சேவை தொடங்கி வைச்சிருக்காரு, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமா தரம் உயர்த்திருக்காரு. நிறையத் திட்டங்களைச் செஞ்சிருக்காரு. திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லிருக்காரு.

செய்தியாளர்: கடந்த ஒரு வார காலமாவே தவெக- அதிமுக- பாஜக பேச்சுவார்த்தை நடப்பதாக பேச்சுகள் வருதே..

எடப்பாடி பழனிசாமி: ஏங்க எங்களுக்கு அதுக்கும் சம்பந்தம் இல்லை. நீங்கதான் (பத்திரிகைகள்) பரப்பிக்கிட்டு இருக்கீங்க. நீங்கதான்… நீங்களா ஒரு கற்பனை பண்ணிக்கிட்டு, நீங்களா இருக்கு இருக்குன்னு சொன்னா நாங்க என்ன செய்ய முடியும்? அப்படி எதுவும் இல்லை. அப்படி எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. போதுமா?

செய்தியாளர்: உங்க கூட்டணியில் புதிய கட்சிகள் சேருமா?

எடப்பாடி பழனிசாமி: நான்தான் இப்ப சொல்றேன்ல? தவெகவோட நாங்க இதுவரைக்கும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

செய்தியாளர்: தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீங்களா சார்?

எடப்பாடி பழனிசாமி: இது என்ன கற்பனையான கேள்வி? நடத்துவீங்களா, போவீங்களான்னு? அதுதான் இல்லைன்னு சொன்னதுக்கு அப்புறம் இன்னும் இப்படி ஒரு கேள்வி.. தவெகவுடன் நாங்க கூட்டணி பேச்சுவார்த்தை இதுவரைக்குக்கும் பேசவில்லை.

செய்தியாளர்: தவெக, பாஜக கூட பேசிட்டு இருக்காங்களா?

எடப்பாடி பழனிசாமி: எங்க கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் எதுவுமே இல்லை. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இல்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share