விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் கூட்டணி அமைக்க பாஜக தலைமை முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுகளும் சூடு பிடித்துள்ளன.
இந்த சூழலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் செங்கல்பட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலையொட்டி அமமுக தலைமையில் கூட்டணி அமைகிறதா அல்லது நாங்கள் வேறொரு கூட்டணியில் இணைவோமா என்பது குறித்து எல்லாம் பொங்கல் சமயத்தில் தெரியவரும்” என்றார்.
மேலும் அவர், 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கலாம் என நினைக்கிறேன். அதன்படி இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி அமையும் என்றும் தெரிவித்தார்.
திமுக குறித்து பேசிய அவர், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டும்தான் தேர்தலில் மக்களை சந்திக்க முடியும் என்றும் கூறினார்.
