அஃகேனம் – விமர்சனம்! இந்த ‘த்ரில்’ போதுமா?

Published On:

| By Minnambalam Desk

Akkenam Tamil Movie Review 2025

Akkenam Tamil Movie Review 2025

தமிழ் திரையுலகில் தொண்ணூறுகளில் அறிமுகமான இளம் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்தவர் அருண் பாண்டியன். இணைந்த கைகள், முற்றுகை, அதிகாரி என்று அவரது படங்கள் வழக்கத்திற்கு மாறானதாக இருந்ததே அதற்குக் காரணம். ஆனால், அதன்பிறகு அவரது படங்கள் அத்தகைய வரவேற்பைப் பெறவில்லை. நாயகனாக, வில்லனாக நடித்தவர் தற்போது குணசித்திர பாத்திரங்களில் அரிதாகத் தலைகாட்டி வருகிறார்.

தனது மகள் கீர்த்தி பாண்டியனுக்காக அவர் ‘அன்பிற்கினியாள்’ படத்தைத் தயாரித்ததோடு, அதில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்தார். தற்போது மீண்டும் அவர் தயாரித்து நடித்துள்ள படம் ‘அஃகேனம்’. இதில் கீர்த்தி பாண்டியன் ஆக்‌ஷன் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

‘க்ரைம் ஆக்‌ஷன் த்ரில்லர்’ வகைமையில் இப்படம் அமைந்திருப்பதாகச் சொன்னது ட்ரெய்லர். தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

’அஃகேனம்’ தரும் திரையனுபவம் எத்தகையது? Akkenam Tamil Movie Review 2025

Akkenam Tamil Movie Review 2025

கையில் கிடைத்த ஆயுதம்! Akkenam Tamil Movie Review 2025

ஐடி நிறுவனத்தில் வேலை என்று சொல்லிப் பெரிதாக அதிகார பலம் இல்லாத சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைக் கடத்தி வருகிறார் சரா என்கிற சரபோஜி (ஆதித்யா ஷிவ்பிங்) (சப்டைட்டிலில் இந்த பெயர் இடம்பெற்றாலும், தணிக்கைக்குப் பின்னர் அந்த பெயர் ‘ம்யூட்’ செய்யப்பட்டிருப்பது ஏனோ?). அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் பெருநகரங்கள் பலவற்றில் இருக்கின்றனர். Akkenam Tamil Movie Review 2025

சென்னையில் சில பேரைக் கடத்துகிற முயற்சியில் ஈடுபடுகிறபோது, அவர்களைப் பற்றிய உண்மை ஒரு போலீஸ் அதிகாரிக்குத் தெரிய வருகிறது. அதற்குக் காரணம், டாக்ஸி ஓட்டுகிற ஒரு பெண். அவரது பெயர் இந்திரா (கீர்த்தி பாண்டியன்).

இந்திராவின் செயலால், அந்த கும்பலின் முகத்திரை கிழிகிறது. சராவின் இடத்தைத் தேடி வருகிறார் ஒரு போலீஸ் அதிகாரி (பிரேம்). அவரைக் கொல்கிறார் சரா.

ஆத்திரத்தின் உச்சத்தை அடையும் சரா, ‘அந்த டாக்ஸி டிரைவரையும் தேடிப் பிடித்துக் கொல்ல வேண்டும்’ என்கிறார். Akkenam Tamil Movie Review 2025

’தானுண்டு தன் வேலையுண்டு’ என்றிருக்கிற இந்திராவுக்கு ராம் (பிரவீன் ராஜா) எனும் இளைஞர் அறிமுகம் ஆகிறார். மெல்ல அவர் மீது காதல் கொள்ளும் அளவுக்கு நிலைமை போகிறது. Akkenam Tamil Movie Review 2025

அதே நேரத்தில், சராவைக் கொலை செய்வதற்காகச் சென்னைக்கு வந்திருக்கும் பாண்டி (அருண்பாண்டியன்), தனக்குச் சற்றும் அறிமுகம் இல்லாத இந்திராவைத் தேடியலைகிறார். அதற்குக் காரணம் ஒரு துப்பாக்கி.

பாண்டியின் துப்பாக்கி எப்படி இந்திராவிடம் சென்றது? சராவுக்குத் தன்னைத் தேடி பாண்டி சென்னைக்கு வந்திருப்பது தெரிந்ததா? சுற்றி வளைக்கிற ஆபத்துகளில் இருந்து காத்துக் கொள்கிற வல்லமை இந்திராவுக்கு இருக்கிறதா?

இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘அஃகேனம்’ படத்தின் இரண்டாம் பாதி.

மையப்பாத்திரமான இந்திராவின் கையில் துப்பாக்கி கிடைப்பதாக ஒரு காட்சி இப்படத்தில் உண்டு. அதன்பிறகான காட்சிகள் பரபரவென்று திரையில் நகர்வதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், அது போதுமானதாக இல்லை என்பதே இப்படத்தின் மைனஸ்.

Akkenam Tamil Movie Review 2025

திருப்தி கிடைக்கிறதா? Akkenam Tamil Movie Review 2025

ஒரு டாக்ஸி டிரைவர் என்பதை நம்பும்விதமாகத் திரையில் தோன்றியிருக்கிறார் கீர்த்தி. சோகம், மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற இடங்களிலும் தனது திறமையை நிரூபிக்கிறார். ஆனாலும், பார்வையாளர்களை அப்பாத்திரத்தோடு ஒன்றிணைக்கிற வித்தை கைவரப் பெறாமல் தடுமாறுகிறார். Akkenam Tamil Movie Review 2025

அருண் பாண்டியனுக்கு இதில் தந்தை பாத்திரம். அவரது பிளாஷ்பேக் இப்படித்தான் இருக்கும் என்று நாம் யூகிக்கிற வகையிலேயே அக்காட்சிகளும் இருக்கின்றன.

வில்லனாக வரும் ஆதித்ய ஷிவ்பிங், ‘அயன்’ படத்தில் வந்த ஆகாஷ்தீப் சைகலை நினைவூட்டுகிறார். ஆனால், அவர் அளவுக்கு ஓவர் ஆக்டிங், சத்தத்தை வெளிப்படுத்தவில்லை.

இன்னும் ஆதித்ய மேனன், பிரவீன் ராஜா, ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், சீதா ஆகியோர் இதில் வந்து போயிருக்கின்றனர். பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் நம்ரிதா பளிச்சென்று நம் மனம் கவர்கிறார். ஆனால், அவருக்குப் போதுமான இடம் திரைக்கதையில் தரப்படவில்லை.

பரத் வீரராகவன் அமைத்திருக்கும் பின்னணி இசை, சட்டென்று நகர்கிற காட்சிகளை ஒரே வரிசையில் கோர்க்கிறது. அது முன்பாதி சட்டென்று நகரக் காரணமாகிறது.

விக்னேஷ் கோவிந்தராஜன் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்னதான் இருண்மைமிக்க இடங்களைக் காட்டினாலும், காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப ஒளிக்கலவையை வடிவமைத்தாலும், நிலப்பரப்பை விரிவாகக் காட்டாத காரணத்தால் கதை நிகழ்கிற இடம் சிறிதாகத் தெரிகிறது. அதனைச் சரி செய்யக் கொஞ்சம் திட்டமிட்டிருக்கலாம்.

தேவாத்யன் படத்தொகுப்பானது காட்சிகளை இறுக்கமாகக் கட்டியிருக்கிறது. ஆனாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையின் மைய இழை தொய்வடைந்திருப்பதைச் சரி செய்ய முடியவில்லை.

வழக்கமான, கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்திற்கேற்ற ஒரு பின்னணியை இதில் அமைத்து தந்திருக்கிறார் கலை இயக்குனர் ராஜா.

இது போக ஸ்டண்ட், ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இப்படத்தில் ஈர்ப்பைத் தருகின்றன.

இப்படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் உதய் கே.

இதற்கு முன்னர் ‘ஐடி நிறுவனப் பணி என்ற பெயரில் ஆள் கடத்தல்’ பற்றிப் பேசுகிற சில படங்களை நாம் கண்டிருக்கிறோம். அவற்றில், நிறுவனங்களின் உள்ளே நிகழ்கிற விஷயங்கள் காட்டப்பட்டிருக்கும். இதில் அந்த இடங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

முழுக்க இந்திரா, சரா, பாண்டி ஆகிய பாத்திரங்களை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை நகர்கிறது. போலவே, காவல் துறையின் செயல்பாடு பற்றிய காட்சியமைப்பும் இதில் அதிகம் இல்லை. இது போன்ற விஷயங்கள் ‘அஃகேனம்’ படத்தைப் பலவீனப்படுத்துகின்றன.

அவற்றைச் சரிப்படுத்தியிருந்தாலே, இன்னும் சில அடிகள் இப்படம் முன்னேற்றம் கண்டிருக்கும். அதன் வழியே, ரசிகர்கள் தவறவிடக் கூடாத படமாக மாறியிருக்கும். கூடவே, திருப்தி தருகிற ஒரு ‘த்ரில்லர்’ படைப்பு எனும் நிலையை எட்டியிருக்கும். தற்போது, அந்த வாய்ப்பு நழுவியிருக்கிறது.

அதனால், ‘இந்த த்ரில் போதுமா’ என்று படக்குழு கேட்பது போன்ற திரையனுபவமே நமக்குக் கிடைக்கிறது. ’அது பரவாயில்லை’ என்பவர்கள் தாராளமாக ‘அஃகேனம்’ கண்டு மகிழலாம்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share