அஜித்குமார் லாக்கப் மரணம்- SIT விசாரணை கோரி ஜூலை 3-ல் தவெக சென்னையில் ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Minnambalam Desk

Ajithkumar Death TVK Protest

கோவில் காவலர் அஜித்குமார் காவல் மரணத்துக்கு நீதி கோரியும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து நீதி விசாரணை நடத்த கோரியும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜூலை 3-ந் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். Ajithkumar Lock-Up Death – TVK Protest

இது தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 03.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share