’விஜய்’-க்கு செய்த ‘அந்த உதவி’.. பகிரங்கப்படுத்திய எஸ்.பி. வேலுமணி

Published On:

| By Mathi

Vijay SP Velumani

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தாம் செய்த உதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுக்கூட்டத்தில் பகிரங்கப்படுத்தினார்.

கோவை சூலூரில் நேற்று பிப்ரவரி 25-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: விஜய்யின் சொந்தக் கட்சிக்காரங்க கரூரில் 41 பேர் செத்து செத்து விழுகுறாங்க. அவருடைய கட்சிக்காரங்க… சகோதரிகள்… ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே வாரிசுதான். அதுல நிறைய பேர் போயிட்டாங்க, இறந்து போயிட்டாங்க. அதை பார்க்காம அப்படியே ஏறிப் போனவரு, திரும்ப வரவே இல்லை.

ADVERTISEMENT

என்ன வேணாலும் இருக்கட்டும், உடனே மருத்துவமனைக்குப் போயிருக்க வேண்டாமா? காப்பாத்த வேண்டாமா? நிறைய பேர் உயிருக்குப் போராடுறாங்க, போய் பார்க்கணும்ல? எப்படி ஏத்துக்க முடியும்?

எனக்கு வந்து நடிகர் விஜய் நண்பர், அது வேற. ஒரு படம் ரிலீஸ் பண்ண முடியலை… நான்தான் வந்து எடப்பாடியார் முதலமைச்சரா இருக்கும்போது கூட்டிட்டுப் போய், என் கார்ல கூட்டிட்டுப் போய், என் வீட்டுக்கு வந்து… கூட்டிட்டுப் போய் ரிலீஸ் பண்ணிக் கொடுத்தேன். அது வேற, அது தனி.

ADVERTISEMENT

ஆனா, மக்களுக்கு இன்னைக்கு ‘தலைவன்’ என சொல்லிட்டு வரும்பொழுது, மக்கள் உயிரைக் காப்பாத்தணும். சொந்தக் கட்சிக்காரனையே இன்னைக்குப் பார்க்கலைன்னா எப்படி சரியா இருக்கும்? அதை சிந்தித்துப் பாருங்க. யாருக்கு ஓட்டு போட்டாலும் அது செல்லாத ஓட்டு.

திமுகவும் ஈழமும்

ADVERTISEMENT

நாளைக்கு நமக்கு பெரிய ஆபத்தா முடிஞ்சுரும். திமுக அவர்கள் மட்டும் இன்னும் ரெண்டு வருஷம் ஆட்சியில் இருந்தாங்கன்னா, இலங்கையில தனி ஈழம் அமைஞ்சிருக்கும்.

தவெகவில் இருந்து திரும்பும் அதிமுக பிரமுகர்கள்

நிறைய பேர் பல கட்சிக்குப் போறாங்க. திமுகவுக்கு போனவங்க திரும்பி வர்றாங்க. இங்க இருக்கிற மரியாதை எங்கேயுமே இருக்காது.

பாக்குறதுக்கு அப்படியே சோக்கா இருக்கும்… ஒரே நாள்ல மாப்பிள்ளை ஆக்கி அனுப்பிடுவாங்க. இன்னைக்கு நிறைய பேர் புதுசு புதுசா ஆரம்பிச்ச விஜய் கட்சிக்குப் போனவங்க, திரும்ப வர்றதுக்கு ரெடியா இருக்காங்க. பேர் சொல்ல விரும்பலை. மரியாதையை திரும்பக் கொடுத்து, அதே பதவி கொடுத்தா திரும்ப வந்தர்றேன்னு பேசுறாங்க. அப்படிதான் சூழ்நிலை இருக்கு. இவ்வாறு எஸ்.பி. வேலுமணி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share