அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ‘பத்து ரூபா பழனிசாமி’ என்று செந்தில் பாலாஜி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு அதிமுக காட்டமாக பதிலளித்துள்ளது.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில் இன்று (அக்டோபர் 1) கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.
அப்போது பாட்டிலுக்கு பத்து ரூபாய் சர்ச்சை தொடர்பாக பேசிய் செந்தில் பாலாஜி, ‘இந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற புகார்கள் வரும் போது அந்த மது பாட்டிலுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் தொகை ஒருவருக்கு செல்கிறது என்றால் கடந்த ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றதா.. அதை அவர்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி என்றால் இன்று முதல் எடப்பாடி பழனிசாமியை 10 ரூபாய் பழனிச்சாமி என்று அழைக்கலாமா? ’ என்று காட்டமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பான எக்ஸ் பதிவில், ‘கரூர் பெருந்துயர் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, EB அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் பிரஸ் மீட் நடத்துகின்றனர்,
-டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார்,
-முதல்வர் வீடியோ வெளியிடுகிறார்,
-வருவாய்ச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர்,
-இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு…
இவ்ளோ பதட்டப்பட்டு என்ன சொல்ல வர்றீங்க திமுக?
விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா?
“அரசியல் செய்யாதீர்” “அரசியல் செய்யாதீர்” என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே?
உங்கள் பதட்டம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்.
அப்புறம், அந்த பத்து ரூபாய்…. இந்தா வர்றோம்…
அஇஅதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் அதற்கு நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம்.
ஆனால், திமுக ஆட்சியில் நடப்பது என்ன?
Senthil Balaji Model Institutionalised Robbery- நிறுவனமயமாக்கப்பட்டக் கொள்ளை!
தமிழகத்தில் உள்ள எல்லா TASMAC கடைகளிலும், பாட்டிலுக்கு மேல் ரூ.10 முதல் ரூ.40 வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடித்துவிட்டு, அதை “Open-ஆகப் பேசுகிறேன்” என்று சொல்லி Justify செய்ய பத்து ரூபாய் பாலாஜிக்கு வெட்கமாக இல்லையா?
இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், “பத்து ரூபாய்” என்று #எடப்பாடி சொன்னாலே, “பாலாஜி” என்று மக்களே சொல்லும் அளவிற்கு, உங்கள் பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார் ஈபிஎஸ்.
அவர்கள். அப்போது எல்லாம் கள்ள மவுனம் சாதித்த பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது?
ஏற்கனவே “காசு வாங்கினேன்… ஆனா திரும்ப கொடுத்தேன்” ன்னு சொல்லி தான் ED வந்து, உங்களுக்கு நெஞ்சு வலி எல்லாம் வந்து அழுதீங்களே…. இப்போ திரும்ப அதே Tone-ல பேசுறீங்களே… இந்த டைம் CBI வந்தா செந்தில்பாலாஜி?” என்று காட்டமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.