தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அதிமுக தாக்கல் செய்த இடையீட்டு மனு தள்ளுபடி செய்யக் கூடியது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
SIR-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த வழக்கில் அதிமுக தரப்பில் இடையீட்டு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய உச்சநீதிமன்ற விசாரணையின் அதிமுக தரப்பில் இம்மனு குறித்து நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அப்போது, “அதிமுக சார்பில் எதற்கு மனுத் தாக்கல் செய்யப்பட்டது? SIR-க்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அப்படி இருக்கும் போது அதிமுக தரப்பில் வேறு ஒரு கோரிக்கையை முன்வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு கோரிக்கைகளும் வெவ்வேறானவை; ஒன்றாக குழப்பக் கூடாது; அதிமுகவின் மனு தள்ளுபடி செய்யக் கூடியது; அதிமுக மனுவை விசாரித்தால் குழப்பம்தான் ஏற்படும் என காட்டமாக தெரிவித்தனர் நீதிபதிகள்.
