வங்கிகளின் பாதுகாப்பை செயற்கை தொழில் நுட்பம் கேள்விக்குறியாக்கலாம் என்று Open AI நிறுவனத்தின் தலைமை செயல் அதிரிகாரி எச்சரித்துள்ளார்.
மாறி வரும் நவீன உலகில் தகவல் தொழில் நுட்ப புரட்சி, பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறது. இன்றைய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் AI மருத்துவம், கல்வி, மென்பொருள் உள்ள பல துறைகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில் நுட்பத்தால் வேலை நேரம் வெகுவாக குறைகிறது. அதே சமயம் இந்த AI தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்பு நாளுக்கு நாள் வெட்டி சுருக்கப்படுவதாக பல தரப்பினரும் தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் சாட் ஜிபிடியின் தாய் நிறுவனமான Open AI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் வங்கிகளின் பாதுகாப்பை AI கேள்விக்குறியாக்கலாம் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் மத்திய வங்கி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சிஇஓ சாம் ஆல்ட்மன் கூறுகையில், ” AI தொழில் நுட்பம் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். AI பழைய முறைகளை முற்றிலும் தோற்கடித்து விட்ட நிலையில் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பு முறைகளை புதுப்பிக்க வேண்டும் என்றார்.
மேலும் வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்கள் முறியடிக்கப்பட்டால் பணம் திருட்டு பெரிய பாதிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது. போலி செய்திகளை பரப்புதல், இணையமோசடி போன்ற குற்ற செயல்கள் அதிகரிக்கலாம். இதனால் AI வளர்ச்சியோடு இணைந்து அதை தவறாக பயன்படுத்தும் முயற்சிகளையும் கட்டுப்படுத்த அரசு, தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டில் குழந்தைகள் சிக்கலில் இருப்பதாக நம்ப வைக்கும் மோசடி விவகாரத்தில் AI குரல் மற்றும் வீடியோ குளோனிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக FBI எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.