‘ஆண்களுக்கு சட்டத்தில் பாதுகாப்பு இல்லை’ – வீடியோ வெளியிட்டு ஐ.டி ஊழியர் தற்கொலை!

Published On:

| By Kumaresan M

மனைவியின் தவறான உறவு காரணமாக ஐ.டி.ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் மாதவ் ஷர்மா. இவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்த நிலையில், தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக வீடியோ வெளியிட்டு விட்டு மாதவ் ஷர்மா உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் அழுது கொண்டே வெளியிட்டுள்ள வீடியோவில், “சட்டம் ஆண்களை பாதுகாப்பதில்லை. ஆண்களை பற்றியும் அதிகாரத்திலுள்ளவர்கள் யோசிக்க வேண்டும். ஆண்கள் குற்றம் சாட்டினால் யாரும் ஏற்றுக் கொள்வதும் இல்லை. இதற்கு முன்னரே, நான் தற்கொலைக்கு முயற்சித்தேன். எனது தற்கொலைக்கு பிறகு, எனது மனைவி எனது பெற்றோருடன் இருக்க கூடாது’ என்று தெரிவித்துள்ளார். Agra man dies by suicide

இதையடுத்து, மாதவ் ஷர்மாவின் தந்தை தனது மகனின் தற்கொலைக்கு மருமகள்தான் காரணம் என்று கூறி சடார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் மாதவ் ஷர்மாவின் மனைவியிடத்தில் விசாரணை நடத்திய போது, இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

போலீசாரிடம் அவர் கூறுகையில், “எனது கணவர் மதுவுக்கு அடிமையானவர். தினமும் அதிகப்படியாக குடித்து விட்டு தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வார். இதற்கு முன்பு பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். நானே, அவரை மூன்று முறை காப்பாற்றியுள்ளேன். திருமணத்துக்கு முன்பு எனக்கு ஒருவருடன் உறவு இருந்தது. ஆனால், திருமணத்துக்கு பிறகு, நான் யாரிடமும் நெருங்கிப் பழகவில்லை” என்று தெரிவித்துள்ளார். Agra man dies by suicide

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. மாதவ் ஷர்மாவின் செல்போனை ஆய்வுக்குட்படுத்திய பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share