ஒரே ஆண்டில் மீண்டும்.. டிச.26 முதல் ரயில் கட்டணம் உயர்வு- எவ்வளவு?

Published On:

| By Mathi

Train Fare Increase

நாடு முழுவதும் டிசம்பர் 26-ந் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

ரயிலே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT
  • ரயில்வே ஊழியர் ஊதியச் செலவு ரூ. 1,15,000 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ. 60,000 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
  • 2024-25 நிதியாண்டில் மொத்த ரயில்வே துறையின் செலவு ரூ. 2,63,000 கோடியாக உயர்ந்துள்ளது.
  • இந்தச் செலவுகளைச் சமாளிக்க, சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதிலும், குறைந்த அளவிலான பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதிலும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
  • புறநகர் ரயில்கள் (Suburban) மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் (MST) கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.
  • 215 கி.மீ வரை பயணிக்க கட்டண உயர்வு இல்லை.
  • 215 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படும்.
  • 215 கி.மீ-க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம்
  • மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படும்.
  • 500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
  • அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • கட்டண உயர்வின் மூலம் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    தமிழகத்தில் கட்டண உயர்வு எப்படி இருக்கும்?
  • சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
  • சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிக்க ரூ15 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
வகுப்பு (Class)தூரம் (Distance)கட்டண உயர்வு (Fare Hike)
சாதாரண வகுப்பு (Ordinary)215 கி.மீ வரைஉயர்வு இல்லை
சாதாரண வகுப்பு (Ordinary)215 கி.மீ-க்கு மேல்1 பைசா / கி.மீ
மெயில் / எக்ஸ்பிரஸ் (Non-AC)அனைத்து தூரம்2 பைசா / கி.மீ
ஏசி வகுப்புகள் (AC Classes)அனைத்து தூரம்2 பைசா / கி.மீ
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share