தங்கம் விலை இன்று காலை சற்றே குறைந்திருந்த நிலையில் பிற்பகலில் அதிரடியாக உயர்ந்து வரலாற்றில் முதல் முறையாக ரூ.80,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று காலை (செப்டம்பர் 8) ஒரு கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று பிற்பகலில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து ரூ.10,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.80,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.280 குறைந்த நிலையில் இன்று பிற்பகலில் ரூ.720 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.