2025 சாம்பியன்ஸ் டிரோபியில் ஆப்கான்… உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லுமா?

Published On:

| By Monisha

afghanistan will enter wolrdcup 2023 semi final?

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ஒருபுறத்தில் அரையிறுதிக்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. Afghanistan will enter wolrdcup 2023 semi final?

மறுபுறத்தில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே 2025 சாம்பியன்ஸ் டிரோபி தொடருக்கு தகுதி பெறும் என்ற ஐசிசியின் அறிவிப்பால், அதற்காகவும் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

2025 சாம்பியன்ஸ் டிரோபி தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில், பாகிஸ்தான் நேரடியாக அந்த தொடருக்கு தகுதி பெற்றுவிட்டது.

இந்நிலையில், புள்ளிகள் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் ஆப்கானிஸ்தான் 6வது அணியாக சாம்பியன்ஸ் டிரோபிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லுமா?

இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி, இன்று (நவம்பர் 7) ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.

தற்போது, ஆப்கானிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புக்கு மிகப்பெரிய தடையாக உள்ள அணிகள், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் மட்டுமே.

ரன் ரேட் அடிப்படையில், இந்த 2 அணிகளைவிட ஆப்கான் மிகவும் பின்தங்கியுள்ளது.

ஒருவேளை நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அவர்களது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணிகள் 10 புள்ளிகளை பெரும்.

அப்படியான சூழலில், ஆப்கானிஸ்தான் ரன்-ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான சூழல் மிகவும் கடினமாகிவிடும்.

அதனால், தனது அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்ள, இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், ஆப்கானிஸ்தான் இன்று களம் காண உள்ளது. Afghanistan will enter wolrdcup 2023 semi final?

சாம்பியன்ஸ் டிரோபியில் மீதமுள்ள 2 இடம் யாருக்கு?

2025 சாம்பியன்ஸ் டிரோபிக்கு இதுவரை 6 அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் போட்டி போட்டுக் கொள்கின்றன.

நேற்றைய வெற்றியின் மூலம், வங்கதேச அணி தனது வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது.

மறுபுறத்தில், அந்த வெற்றி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்காக வாய்ப்பை பெரிய அளவில் பாதித்துள்ளது.

இங்கிலாந்து தனது கடைசி போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெறாத பட்சத்தில், அந்த அணிக்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

கமல் படத்திற்கு டிரெண்டிங் டைட்டில்: ’தக் லைஃப்’ அர்த்தம் என்ன?

50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான Poco C65: சிறப்பம்சங்கள் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share