செம பிரமாண்டம், வெறும் 15௦ பேருக்கு மட்டுமே அழைப்பு… காதலரை கரம்பிடிக்கும் நடிகை மீரா சோப்ரா

Published On:

| By Manjula

actress meera chopra wedding boyfriend

நடிகை மீரா சோப்ரா தன்னுடைய காதலனை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். அதுகுறித்த தகவல்களை கீழே பார்ப்போம்.

எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படத்தின் வழியாக கடந்த 2௦௦5-ம் ஆண்டு தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா சோப்ரா. தொடர்ந்து ‘ஜாம்பவான்’, ‘லீ’, ‘மருதமலை’, ‘காளை’, ‘ஜெகன்மோகினி’, ‘இசை’ ஆகிய படங்களில் நடித்தார்.

கடைசியாக 2௦15-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘கில்லாடி’ படத்திற்கு பிறகு அவர் புதிய படங்களில் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட் படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். இதற்கிடையில் நீண்ட நாட்களுக்கு முன் மீரா சோப்ராவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது அது உண்மையாகி இருக்கிறது. அதன்படி தற்போது 40 வயதினை எட்டியிருக்கும் மீரா சோப்ரா தன்னுடைய காதலனை மணக்கவிருக்கிறார். மீராவின் திருமணம் ஜெய்ப்பூர் – டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் வருகின்ற மார்ச் 11, 12 தேதிகளில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

actress meera chopra wedding boyfriendதிருமணத்தில் கலந்துகொள்ள மிகவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் என சுமார் 15௦ பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறதாம். இந்து முறைப்படி திருமணம் நடைபெற உள்ளதாகவும், மீரா தன்னுடைய குடும்பத்தினருடன் மார்ச் 9-ம் தேதியே ரிசார்ட்டுக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தன்னுடைய காதலன் குறித்த தகவல்களை மீரா மிகவும் ரகசியமாக வைத்துள்ளார். அவர் ஒரு தொழிலதிபர் என்பதைத்தாண்டி பெயர் உட்பட அனைத்து விவரங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கின்றன. விரைவில் மீராவின் காதலர் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் : ஸ்டாலினை சாடிய எடப்பாடி

பிறந்தநாள்… தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share