ரோபோ சங்கர் பேரனின் காதணி விழா நடைபெற இருந்த நிலையில் அவர் நேற்று மரணமடைந்துள்ள சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இந்நிலையில் அவரது உடலுக்கு துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின், கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், சத்தியராஜ், வெற்றிமாறன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் குழந்தை நட்சத்திரனுக்கு நாளை (செப்டம்பர் 20) உசிலம்பட்டியில் உள்ள மானூத்து பகுதியில் காதணி விழா நடைபெற இருந்தது. நாளை மறுநாள் அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரோபோ சங்கரின் திடீர் மரணம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பேரனின் காதணி விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற ரோபோ சங்கரின் ஆசை நிறைவேறாமல் போனது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.