நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 27) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 31 பேர் உயிரிழந்திருந்ததாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.” என தெரிவித்துள்ளார்.