திமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், தங்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நிலையில் திமுக கூட்டணியிலேயே சிபிஎம் தொடருகிறது என்றும் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் 5 இடங்களை சிபிஎம் கட்சிக்கு ஒதுக்க திமுக முன்வந்தது. ஆனால் திமுக கூட்டணியில் 6 இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதில் சிபிஎம் உறுதியாக இருக்கிறது. இந்த 6 என்ற எண்ணிக்கையை குறைப்பதை ஏற்க முடியாது என சிபிஎம் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையிலான குழு இன்று மார்ச் 22-ந் தேதி சந்தித்து பேசியது.
