தனி ஒருவர் ஒரு படத்தைத் தயாரிப்பது, அல்லது சில பேர் சேர்ந்து கூட்டாகத் தயாரிப்பது… இதெல்லாம் தமிழ் சினிமாவில் பலகால வழக்கம்தான்.
ஆனால் அதில் இருந்து மாறுபட்டு நிறைய பேரிடம் ஆயிரம், லட்சம் என்று பணம் வாங்கி ஒன்று திரட்டி, படம் எடுக்கும் முறையும் இருந்து வந்தது. அதற்கு CROWD FUNDING என்று பெயர் (இருப்பது பலருக்கும் தெரிந்து இருக்கலாம்)
அதே போல ஒரு CROWD டே சேர்ந்து கைதட்ட, முக்கியப் பிரபலங்கள் சிலர் படத்தின் டிரைலரை வெளியிடுவதும் புதிய விஷயம் இல்லை.
ஆனால் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ ராஜ் – மாளவிகா நடிப்பில் அக்டோபர் 31 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தின் முன்னோட்டத்தை,
ரியோ ராஜின் சொந்த ஊரான ஈரோட்டில் இருக்கும் எக்செல் கல்லூரியில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து சரியாக காலை 11.30 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்கள் சமூக ஊடக கணக்குகளில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இது உலக சாதனை என்கிறார்கள் (லிம்கா புக் இல்லாவிட்டாலும், ஒரு FANTA புக் ஆவது இதைப் பதிவு செய்யுமா?)
CROWD ட்ரைலர் லான்ச் என்பது வித்தியாசமான சுவாரஸ்யமான விஷயம்தான். ஆனால் ரசிகர்கள் கிரவுடு கிரவுட் ஆக (அதாங்க .. கூட்டம் கூட்டமாக ) பார்க்க வரும் அளவுக்கு படமும் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.
அது முக்கியம் அமைச்சரே!.
ராஜ திருமகன்

