தமிழக வெற்றிக்கழக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா களமிறங்குவதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கப் போகிறார் என்றும் அவரை எதிர்த்து அண்ணாநகர் கார்த்திக் மோகன் போட்டியிடுகிறார் என்றும் நமது மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
