ADVERTISEMENT

ஒரு கோழிக்காக வாலிபர் சுட்டுக்கொலை!

Published On:

| By vanangamudi

A young man was shot dead over a chicken!

கோழி பிடிப்பதற்காக நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றவர் குறிதவறி சுட்டத்தில் பக்கத்து வீட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை.

ADVERTISEMENT

இவர் நேற்று இரவு அவருடைய மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக அவர் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டுள்ளார்.

ஆனால் குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் தலைமீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

அதோடு சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன், இந்த கொலை சம்பவத்திற்கும் காரணமான அண்ணாமலையை பிடித்து கரியாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share