“வரும் அக்டோபர் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் காசா போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 8) தெரிவித்துள்ளார்.
காசா மீது இனப் படுகொலைகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என 66,000 பேர் உயிரிழந்த நிலையில், லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இன்று அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் சென்னையில் வரும் 8ம் தேதி நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், “வரும் அக்டோபர் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் காசா போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.