ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத 8.858 காலி பணியிடங்களுக்கு (RB NTPC 2025 CEN 06/2025; CEN 07/2025 Notification)அக்டோபர் 21-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிராஃபிக் அசிஸ்டெண்ட், டிரெயின் கிளார்க், ஜூனியர் கிளார்க், அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட 10 பணிகளுக்கு 8,858 காலி இடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கான ஊதியம் ரூ19,900 முதல் ரூ35,400 வரை வழங்கப்படும்.
18 வயது முதல் 33 வயது வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை
இந்த பணியிடங்களுக்கு அக்டோபர் 21-ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; நவம்பர் 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.
கூடுதல் விவரங்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.rrbcehnnai.gov.in
அறிவிக்கை எண்கள்: CEN 06/2025; CEN 07/2025.
அறிவிக்கை விவரம்:
