ADVERTISEMENT

மாம்பலம் ரயில் நிலையத்தில் 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 10 மற்றும் 11-இல் மறுசீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை எழும்பூர் – திருச்சி சோழன் அதிவிரைவு ரயில்

ADVERTISEMENT

சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் – புதுச்சேரி விரைவு ரயில்

ADVERTISEMENT

சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் – மன்னார்குடி விரைவு ரயில்

சென்னை எழும்பூர் – சேலம் அதிவிரைவு ரயில்

ஆகிய எட்டு அதி விரைவு ரயில்கள் பிப்ரவரி 22 முதல் ஏப்ரல் 6 வரை மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share