தமிழகத்தில் SIR மூலம் சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளைத் தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 2025இல் தொடங்கியது. இதற்காக நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை எஸ்.ஐ.ஆர் (SIR – Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2025 நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில் 97.30 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும் கடந்த ஜனவரி 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொள்ள 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன.

ADVERTISEMENT

அவற்றைப் பரிசீலித்து, இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.அதன் அடிப்படையில், தமிழகத்தில் மொத்தம் 5, 67, 07,380 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் SIR பணிகளுக்கு முன் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில் 74,07,207 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள வாக்காளர்களின் விபரம்

ADVERTISEMENT

ஆண் வாக்காளர்கள்: 2,77,38,925
பெண் வாக்காளர்கள்: 2,89,60, 838 பேர்
மூன்றாம் பாலினத்தவர்: 7,617 பேர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானாலும் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share