வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மீண்டும் விண்ணப்பிக்கலாம் – அர்ச்சனா பட்நாயக்

Published On:

| By Kavi

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க மீண்டும் படிவம் 6-ஐ மக்கள் வழங்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 

நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் தமிழகத்தில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து  நீக்கப்பட்டவர்கள் தகுதியிருப்பின் உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்தசூழலில் அனைத்து பணிகள் நிறைவடைந்த பின்னர் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, 

ADVERTISEMENT

மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380 
ஆண் வாக்காளர்கள்: 2,77,38,925 
பெண் வாக்காளர்கள்: 2,89,60,838 
மூன்றாம் பாலினத்தவர்: 7,617  பேர் உள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். 

ADVERTISEMENT

துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக 1,68,96 வாக்காளர்கள் உள்ளனர். 

இன்று முதல் மீண்டும் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை (Form 6) பொதுமக்கள் வழங்கலாம். வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்துள்ள வாக்காளர்கள் தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் தரப்பட்ட நிலையில் படிவம் 6 மூலம் ஏற்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 27,53,796. தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில்  எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 2025-ல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில்,எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 5.67 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share