கெத்து காட்டிய சிஎஸ்கே… சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்தி வெற்றி!

Published On:

| By Selvam

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இன்று (மார்ச் 23) வெற்றி பெற்றுள்ளது.

சென்னை, மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. Chennai beats mumbai indians

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் ரோகித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் ( 29 ரன்கள்), திலக் வர்மா ( 31 ரன்கள்), சகர் (28 ரன்கள்) எடுத்து அணியின் ரன் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.

சென்னை அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், நூர் அகமது 4 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவிந்திரா, ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்கினர். ராகுல் திரிபாதி 2 ரன்களில் அவுட்டாகி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரச்சின் ரவிந்திரா, கேப்டன் ருதுராஜ் ஜோடி அதிரடியாக ஆடி பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அனுப்பினர்.

இதனால் சிஎஸ்கே ரன் மளமளவென உயரத்தொடங்கியது. தொடர்ந்து 19.1 ரன்கள் ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவிந்திரா 65 ரன்கள், தோனி ரன்கள் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் விக்னேஷ் புத்தூர் மூன்று விக்கெட்டுகளும், தீபக் சஹார், வில் ஜாக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share