சென்னை சென்ட்ரல் கூடுர் பிரிவில் எண்ணூர்-அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இதன் காரணமாக இன்று (செப்டம்பர் -11) இரவு 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பபட்டுள்ளது. இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (செப்டம்பர் -12) அதிகாலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர் மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இன்று இரவு 11.20 மணிக்கு புறப்படும். அதேசமயம் கும்மிடிப்பூண்டியிலிருந்து இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் மற்றும் மின்சார ரயில் ஆகியவை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர் மார்க்கெட்டிலிருந்து நாளை அதிகாலை 4.15 மணிக்கு சூலூர்பேட்டை புறப்படும் ரயில் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் 2 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் பாதிப்பை தடுக்கும் வகையில் இன்று இரவு 10.35, 11.20 மற்றும் நாளை அதிகாலை 4.15, 4.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.