காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் உட்பட 6 மாவட்ட நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் நீதிபதி அல்லி இன்று (அக்டோபர் 6) வெளியிட்டுள்ள உத்தரவின்படி,
1. சமீபத்தில் முன்பகை விவகாரத்தில் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல், அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. சென்னை வணிக நீதிமன்ற முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்த தீப்தி அறிவுநிதி, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
3. திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிபதி பி.வேல்முருகன், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த கே.பூரண ஜெய ஆனந்த், இடமாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த துணை ஜே.சந்திரன், இடமாற்றம் செய்யப்பட்டு, சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மூன்றாவது கூடுதல் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்த மாவட்ட நீதிபதி வி.தேன்மொழி, திருப்பத்தூர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
