இதய, சிறுநீரக பிரச்சனை வராமல் தடுக்க.. 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனைகள் ரொம்ப முக்கியம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

6 Blood tests every 6 months to prevent heart liver and kidney diseases

ஒவ்வொரு 6 மாதங்களுக்கு குறிப்பிட்ட 6 ரத்த பரிசோதனைகளை அவசியம் செய்துகொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் சர்க்கரை நோய் என்பது பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறியுள்ளது. அத்துடன், கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகளால் லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் காலங்களில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகவே, உடல்நலனின் நாம் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ADVERTISEMENT

ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி என்பதைத் தாண்டி 30 வயதுக்கு மேல் உடல்நலனையும் கண்காணிக்க வேண்டியது முக்கியமானதாகும். குறிப்பாக உடல்நலன் குறித்த பரிசோதனையை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை 6 பரிசோதனைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த ரத்த பரிசோதனைகள் என்ன, அவை எவ்வாறு நமக்கு உதவுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை (HbA1c): HbA1c பரிசோதனை என்பது கடைசி 3 மாதங்களுக்கான இரத்த சர்க்கரை அளவைக் காட்டுகிறது. இது சர்க்கரை, ப்ரீ டயபடிக் மற்றும் ரத்த குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்க உதவுகிறது. இந்த பரிசோதனைக்கு சாப்பிடாமல் செல்ல வேண்டிய தேவையில்லை. இது நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. உயர் ரத்த சர்க்கரையின் கடுமையான பக்க விளைவுகளைத் தவிர்க்க உதவுகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் HbA1c பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

கல்லீரல் செயல்பாட்டு சோதனை (Liver Function Test) : LFT பரிசோதனை கல்லீரல் எப்படி செயல்படுகிறது என்பது குறித்த ரிசல்ட்டை வழங்குகிறது. கல்லீரலில் கொழுப்பு படிதல், மஞ்சள் காமாலை அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால்,  LFT சோதனை தொடக்க காலத்திலேயே அதனை வெளிப்படுத்தும். உங்களுக்கு எந்த அடிப்படை மருத்துவ பிரச்சனைகளும் இல்லை எனில், 30 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இந்த பரிசோதனையை நீங்கள் செய்யலாம்.

சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனை (Kidney Function Test) : சிறுநீரக நோயைத் தடுக்கவும், அது தீவிரமடைவதற்கு முன்பே அடையாளம் காணவும் KFT பரிசோதனை அவசியமாகும். 30 வயதிற்குப் பிறகு இந்தப் பரிசோதனையை செய்து கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  ஏனெனில் வயதுக்கு ஏற்ப சிறுநீரக நோய்க்கான ஆபத்துகள் கணிசமாக அதிகரிக்கின்றன.

ADVERTISEMENT

லிப்பிட் ப்ரொபைல் (Lipid profile) : லிப்பிட் ப்ரொபைல் என்பது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால்,  ட்ரைகிளிசரைடு போன்ற கொழுப்பு வகைகளை அளவிடும் ஒரு முக்கியமான ரத்தப் பரிசோதனையாகும். இதய ஆரோக்கியத்தை மதிப்பிடவும் இது பயன்படுகிறது. இதய நோய் வராமல் தடுக்க அல்லது கட்டுப்படுத்த இது மிகவும் முக்கியமானதாகும்.

வைட்டமின் பி12 (Vitamin B12): வைட்டமின் பி12 நமது நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. இந்த வைட்டமின் குறைபாடு மிகவும் பொதுவானது. ஆனால், பலர் அதன் அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள், இது சிறிய பிரச்சனை என்று நினைக்கிறார்கள். ஆகவே, இந்த சோதனை உங்களுக்கு மிகவும் முக்கியமானது.

வைட்டமின் D3 (Vitamin D3): இந்த சோதனை உடலில் வைட்டமின் டி அளவை அளவிடுகிறது. இந்த சோதனை எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரியான கால்சியம் உறிஞ்சுதலை அளவிடுகிறது.

ஆகவே இந்த 6 அடிப்படையான பரிசோதனைகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் உடல்நலப் பிரச்சனைகளை தவிர்த்து அல்லது முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்து நலமுடன் வாழலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share