ஹெல்த் டிப்ஸ்: மது அருந்தாதவர்களுக்கும் ‘ஃபேட்டி லிவர்’… என்ன காரணம்?

Published On:

| By christopher

இன்றைய காலகட்டத்தில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யும்போது அதில் ‘லிவர் ஃபங்ஷன் டெஸ்ட்’ (Liver function test) செய்து கொள்ள அறிவுறுத்தப்படுவது அவசியமாகிவிட்டது.

அதற்குக் காரணம், செரிமான மண்டலத்தில் முக்கியமான உறுப்பான கல்லீரலில் உண்டாகும் ‘ஃபேட்டி லிவர்’ (Fatty liver) பாதிப்பு.

ADVERTISEMENT

இது மது அருந்துபவர்களைத்தான் அதிகம் தாக்கும் என்கிற நிலையில், ‘நான் ஆல்கஹால் அருந்துவதில்லை. சிகரெட் புகைப்பதில்லை. அசைவம் சாப்பிடுவதில்லை. அப்படி இருக்கும்போது எப்படி எனக்குக் கல்லீரல் கெட்டுப்போகும்?’ என்று கேட்பவர்களுக்கான பதிலைத் தருகிறார்கள் குடல் மற்றும் இரைப்பை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள்.

“நீங்கள் அசைவம் சாப்பிடுவதில்லை, உங்களுக்கு மதுப்பழக்கம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள சைவ உணவுகளைக் கண்டபடி சாப்பிட்டிருப்பீர்கள். உடல்பருமன் உள்ளதைப் பொருட்படுத்தவே மாட்டீர்கள். இந்த இரண்டு வில்லன்கள்தான் உங்களுக்கு வினையாகும்.

ADVERTISEMENT

இந்தப் பிரச்சினைக்கான முதலும் முக்கியமுமான தீர்வு உடற்பயிற்சி. தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்வதன் மூலம் கல்லீரலில் உள்ள கொழுப்பு கரையும்பட்சத்தில் வேறு சிகிச்சைகளே தேவையிருக்காது.

கூடவே அசைவ உணவுகள், கொழுப்புள்ள உணவுகளையும் தவிர்த்துவிட்டால் ஃபேட்டி லிவர் பிரச்சினையை சிகிச்சையின்றியே சரி செய்யலாம்.

ADVERTISEMENT

தேவைப்பட்டால் ‘லிவர் ஃபங்ஷன் டெஸ்ட்’ செய்து பார்த்து அதில் ஏதேனும் மாறுதல்கள் தென்படும்பட்சத்தில் அதற்கு மட்டும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் போதுமானது” என்கிறார்கள்

மேலும், “இப்போது 30 வயதுகளில் உள்ளவர்களே இந்த ஃபேட்டி லிவர் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.

உடற்பயிற்சி இல்லாமல், சரியான உணவுமுறையைக் கடைப்பிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் அது இன்னும் கூடுதலாக உடல்நலனைக் கெடுக்கும். கல்லீரலில் கொழுப்பு சேரும்.

இதுபற்றி விழிப்பு உணர்வு வேண்டும். உடல்பருமன், தைராய்டு, டயாபட்டீஸ், கொலஸ்ட்ரால் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். மது அருந்தினால் கல்லீரல் பாதிக்கப்படும் என்ற விழிப்பு உணர்வு ஓரளவு பரவலாக உண்டாகியுள்ளது. ஆனால், ‘நான் ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ (Non alcoholic liver disease) பற்றி இன்னும் பலருக்கும் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இவனெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது? – அப்டேட் குமாரு

சாம்சங் போராட்டம் முடிந்ததா? இல்லையா? – தொடரும் சர்ச்சை!

அமித்ஷாவை சந்தித்தாரா ஒபிஎஸ்? – டெல்லி பயண பின்னணி இதுதான்!

‘தெறி’ இந்தி ரீமேக் : கேமியோ ரோலில் சல்மான் கான்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share