கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே மேல் பூவானிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதான இவர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தாயார் அப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் முந்திரிக்கொட்டை உடைக்கும் பணிக்கு சென்று வருகிறார்.
அதே நிறுவனத்தில் பள்ளி நீரோடையைச் சேர்ந்த மஞ்சுளா (வயது 50) என்ற பெண்மணியும் வேலை செய்து வருகிறார்.
கல்லூரி விடுமுறை நாட்களில் அறிவழகனும் முந்திரி கொட்டை உடைக்கும் பணிக்கு செல்வதுண்டு. அப்போது மஞ்சுளாவுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று வருவது வாடிக்கையானது. பின்னர் அவ்வபோது இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி காலையில் கல்லூரிக்கு சென்ற அறிவழகன், மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது தாயார் 21ஆம் தேதி மதியம் 2 மணிக்கு குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் கொடுத்தார்.
அப்போது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மஞ்சுளாவை 22ஆம் தேதி கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது அறிவழகனை அவர் கடத்தி, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது உறுதியான நிலையில் குற்ற எண் 259/25 குழந்தை கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட மஞ்சுளா தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 50 வயது ஆண்ட்டி 17 வயது சிறுவனை கடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.