ADVERTISEMENT

தேர்தலுக்கு பின்னர் மொபைல் ரிசார்ஜ் கட்டணம் உயர்வு?

Published On:

| By Kavi

ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மொபைல் ரீசார்ஜ் கட்டண விகிதங்களை உயர்த்தக்கூடும் என்று Antique Stock Broking ஆய்வுகள் கூறுகின்றன.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் தொலைபேசி கட்டணங்கள் உயர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மகாராஷ்டிராவை சேர்ந்த நிறுவனமான Antique Stock Broking நிறுவனத்தின் ஆய்வுபடி, பொதுத் தேர்தலுக்குப் பிறகு தொலைத்தொடர்பு சேவை கட்டணம் 15 முதல் 17 சதவிகிதம் வரை கட்டணம் உயரக் கூடும்.

ADVERTISEMENT

இந்த விலை உயர்வின் காரணமாக பாரதி ஏர்டெல் நிறுவனம் அதிகம் பயனடையலாம் என்றும் 2027ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் ஒரு பயனாளியிடம் இருந்து பெறும் சராசரி வருவாய் ரூபாய் 208 முதல் 286 ரூபாய் வரை உயரக்கூடும்.

ஜியோ, வோடாபோன் உள்ளிட்ட 4ஜி, 5ஜி சேவை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

5ஜி உள்கட்டமைப்புக்காக டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளதாகவும், அதை ஈடுகட்டும் வகையில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

2021ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 19-25% வரை கட்டணங்களை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share