திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் மருத்துவரை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பணியில் இருந்த மருத்துவர் கார்த்திக் முருகன் வழக்கம் போல் தனது பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோவில் வழி பகுதியைச் சேர்ந்த தீபக், கார்த்தி என்ற இருவரும் சாலை விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் எக்ஸ்ரே எடுக்க காத்திருக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதனை ஏற்காத அவர்களின் நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்கு வாதம் முற்றிய நிலையில் அவர்கள் மருத்துவரை தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அவர்களைப் பிடித்து தெற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
