விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி கார் தீ பிடித்து எரிந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள நாகம்மை காட்டன் மில் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து ஐந்து பேர் கேரள மாநிலம் மூணாறு சென்றனர்.
இன்று (அக்டோபர் 2) அதிகாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்பு கட்டையில் மோதி எதிரில் வந்த லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் தீப்பற்றியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் காரிலேயே சிக்கி தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்திற்காகன காரணம் குறித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் கொளத்தூர் பகுதியை சேர்ந்த சம்சுதீன் (25). கொளத்தூரை சேர்ந்த ரிஷி, மற்றும் ஆவடி பகுதியை சேர்ந்த மோகன் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் அப்துல் அஜீஸ், தீபக் இருவரும் படுகாயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.