ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் 3 மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும்,
அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
சிவகங்கை, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியை தொடர்ந்து கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்டஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவள்ளூர் மழை பொழிவை பொறுத்து நாளை காலை விடுமுறை அறிவிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.
