தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நிகழ்ந்த 25 காவல் மரணங்கள் (லாக்கப் மரணங்கள் Lock-up Deaths) குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். Lock-Up Deaths Edappadi Palaniswami
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று ஜூலை 1-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம்
(@India_NHRC) முன்வந்து விசாரிக்க வேண்டும்.
இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் “வலிப்பு” என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை. “Deja Vu” எல்லாம் இல்லை- விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது சொல்லப்பட்ட அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது காவல்துறை என தெரிவித்துள்ளார்.